districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு: பல்வேறு அமைப்பினர் முழக்கம்!

திருப்பூர், அக்.10- சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நடத்தி வரும் தொழிற்சங்க உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தொழிற்சங்க உரிமைக்காக சாம்சங் இந்திய நிறுவனத் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உரிய தீர்வு காணாமல், மாநில அரசு காவல் துறையை முதலாளிகளுக்கு ஆதரவாக களமிறக்கி, தொழிலாளர்க ளையும், தொழிற்சங்கத் தலைவர்களை யும் கைது செய்து வருகிறது. இதனை கண்டித்தும், சாம்சங் தொழிலாளர்க ளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார் பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொங்கலூர் வட்டாரச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரபு செபாஸ்டியன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில் வட்டாரச் செய லாளர்கள் கனகராஜா, வெங்கடேஸ்வ ரன், பாலசுப்ரமணியம் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய லட்சுமி நன்றி கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் இ.விக்டர் செல்வ குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.அருள் சுந்த ரரூபன், மாவட்டச் செயலாளர் யு.கே.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் கே.மைனாவதி நன்றி கூறினார்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் கொட்டும் மழையி லும், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவ ணக்குமார் தலைமை வகித்தார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசு, மாவட்டத் தலைவர் ரங்கநாதமூர்த்தி மாவட்டச் செயலாளர் வீராசாமி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளா னந்தம், மாவட்டச் செயலாளர் வேல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்கம் திருப்பூர் 60 அடி சாலையிலுள்ள சாம்சங் விற்பனையகத்தை முற்றுகை யிட்டு, வாலிபர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.அருள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், காவல் துறையினர் போராட்டக்கா ரர்களை கைது செய்தனர்.  உடுமலை, ஜல்லிபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியா ழனன்று கொட்டும் மழையிலும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒன்றிய துணைச்செயலாளர் சுவாமி தலைமை வகித்தார். இதில் தாலூகாத் தலைவர் ராமசாமி, செயலாளர் தமிழ்தென்றல், பொருளாளர் லோகேஷ்வரன், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீ சன், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிஐடியு

திருப்பூர் - அவிநாசி சாலை, அனுப் பர்பாளையம்புதூர் அருகே சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, பனியன் சங்க ஏரியாச் செயலா ளர் பாண்டியராஜன் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், துணைத்தலைவர் கே.உன் னிகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.சம்பத், கட்டுமான சங்க மாநில பொதுச்செயலாளர் டி.குமார் உட்பட துறைவாரியான சங்கத்தினர் கலந்து கொண்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சி அலு வலகம் முன்பு, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பனியன் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் சம்பத், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் கள் சுப்பிரமணியம், தேவராஜன், பனி யன் சங்க ஒன்றியத் தலைவர் பாலசுப்பி ரமணியம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடாசலம், தமுஎகச நிர்வாகி காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல, சிஐடியு - சிபிஎம் கருவ லூர் கிளைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் சண்முகம், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் சரவணன், கிளைச் செயலாளர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம், ஓமலூரில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் பி.தங்கவேலு, வட்டத் தலைவர் என்.ஈஸ்வரன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், தலைவர் கணபதி, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.அரியாக்கவுண்டர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சிஐடியு மாவட்டக்குழு சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கர லிங்கம் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டப்s பொருளாளர் நவீன் சந்திரன், எல்ஐசி மாவட்டத் தலைவர் கோபால், இபிஎஃப் பென்சனர் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சிஐடியு நிர்வாகிகள் பழனிச் சாமி, யு.மூர்த்தி, சேகர், அன்பரசு, சிம்பு, ராஜரத்தினம், மொய்சின் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.