districts

அவிநாசியில் குடிநீர் தரம் பற்றி ஆய்வு

அவிநாசி, பிப்.22 - அவிநாசி பேரூராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர்  பேரூராட்சி நிர்வாகம் சார் பில் ஆய்வு செய்யப்பட்டது. அவிநாசி பேரூராட்சியில்  மொத்தம் 18 வார்டுகள்  உள்ளன. இதில், விநியோ கிக்கப்படும் தண்ணீரில் கலப்படம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் பேரூ ராட்சி செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப் புசாமி ஆகியோர் பேரூராட்சிக்குட்பட்ட பார்க் வீதியில் உள்ள  இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் நான்காவது குடிநீர் திட்டத்தின் தண்ணீரை ஆய்வு  செய்தனர். இதில் குடிநீரில் குளோரினேசன் இரண்டு பிபிஎம்  மற்றும் டிடிஎஸ் 88 ஆக உள்ளது. இதை பொதுமக்கள் அச்சம்  இல்லாமல் குடிக்கலாம்  என்று தெரிவித்துச் சென்றனர்.