சேலம், டிச.30- இந்திய மாணவர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு அமைப்பு தினம் வெள்ளியன்று கொடியேற்றி கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 53 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங் களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. (சங்ககிரி, சன்னியாசி பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி, அம்பேத்கர் விடுதி) இதன் ஒரு பகுதியாக சேலம் அரசு கலைக்கல்லூரி அம்பேத்கர் மாணவர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்க கொடியேற்றப்பட்டது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் பவித்ரன், மாவட்ட துணைச்செயலாளர் டார்வின், மாவட்டக்குழு உறுப்பினர் கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசாருதீன், மாநில செயற் குழு உறுப்பினர் கயல்விழி மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.