திருப்பூர், பிப்.25- இந்தியை திணிக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வா யன்று திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக் கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து செவ்வாயன்று தமிழ் நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார் பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதி யாக திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக திருப்பூர் வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் செ.திலகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ச. முத்துக்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரவின்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஷாலினி, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் டி.ஆர்.சந்தீப், மதிமுக மாவட்ட மாணவரணி அஸ்வின், எம்எப்எஸ் மாநில துணைத் தலைவர் மு.முகமது, விசிக பள்ளி, கல்லூரி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் அ.கலையழகன், சமூக நீதி மாணவர் இயக்கம் மண்டல செயலாளர் எஸ்.ஆசிப் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கல்கி ராஜ் உட்பட் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டிஎஸ்எப் மாவட்ட மாணவரணி தலைவர் மா.சூர்யா நன்றி கூறி னார்.