districts

img

நகை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு உடனே வழங்கிடுக

சேலம், ஜூன் 29-    தமிழக அரசு நகை மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி தொகையினை கூட்டு றவு சங்கங்களுக்கு உடனே வழங்க  வேண்டும் என சேலம் விபிசி நினைவகத் தில் நடைபெற்ற சிஐடியு சேலம் மாவட்ட  கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் சங்க 37-ஆவது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்க ளின் பணியாளர்கள் சங்க (சிஐடியு) 37 ஆவது ஆண்டு பேரவை  வி.பி. சிந்தன் நினைவகத்தில் சங்க தலைவர் பொ பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்றது. செயலாளர்  எல்.கே.மனோக ரன் வேலை அறிக்கையினையும், பொருளாளர்  எஸ் கருணாகரன் வரவு  செலவு அறிக்கையினையும் முன் வைத் தனர்.  என்.ஆர்.ஆர். ஜீவானந்தம், தமிழ் நாடு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளன  மாநில பொதுச் செயலாளர் சிறப்புரை யாற்றினார்.

இதில் எஸ்கே தியாகரா ஜன், மாநில துணைத் தலைவர், சாலை  போக்குவரத்து சம்மேளனம், டி. உதய குமார்,  சிஐடியு மாவட்ட செயலாளர், எம்.ரங்கசாமி, நாமக்கல் மாவட்ட கூட்டு றவு சங்க செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தமிழக அரசு, ரூ 12,310 கோடி பயிர்க்  கடன் தள்ளுபடி மற்றும்  14.40 லட்சம் பய னாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகைக் கடன் தொகையினை கூட்டுறவு  சங்கங்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். நியாய விலைக் கடை பணி யாளர்களுக்கு விடுபட்ட 3 சதவீத பஞ்சப் படி வழங்கப்பட வேண்டும்.  கட்டுநர் (Pa ckers) மற்றும் விற்பனையாளர் காலி  பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். 480 நாட்கள் பணி நிறைவு  செய்த ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டு றவு பால் சங்க ஊழியர்களுக்கு நிரந் தரமான காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள்  பேரவையில் பொ.பன்னீர் செல் வம் தலைவராகவும், எல்.கே. மனோ கரன் பொதுச் செயலாளராகவும், எஸ் கருணாகரன் பொருளாளராகவும் மற் றும் மாவட்ட நிர்வாகிகள், கமிட்டி  உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். எஸ் கலிபுல்லா நன்றி தெரிவித் தார்.

;