districts

img

குறுமைய குழு விளையாட்டுப் போட்டிகள்

அவிநாசி, ஆக.20- அவிநாசி அருகே பந்தம்பாளையம் கேம்பிரிட்ஜ் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியில் குறுமைய விளையாட்டுப் போட்டி கள்  நடைபெற்றன. அவிநாசி அளவிலான குறுமைய குழு விளையாட்டுப் போட்டிகளில் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் கோ-கோ, டேபிள் டென்னிஸ் (ஒற்றையர், இரட்டையர்)  ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை பள்ளித் தாளாளர் துரைசாமி தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக் குநர் ராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன், கார்த்தி கேயன், லோகநாதன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கி ணைத்தனர். 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோர் என தனித்தனி  பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில்  70க்கு மேற்பட்ட  பள்ளிகளைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர்கள் பங்கேற்றனர்.   இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற் றனர்.