காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி தருமபுரி, பிப்.23- பாலக்கோடு ஒன்றியத் திற்குட்பட்ட பகுதியில் காட் சிப்பொருளாக காணப்படும் தண்ணீர் தொட்டியை, பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், எர் ரணஹள்ளி ஊராட்சிக்குட் பட்ட புதூர் வடையண்கிணறு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி வைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த குடிநீர் தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப்பொரு ளாக உள்ளது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலை யில், அப்பகுதியினர் தண்ணீரை தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. பழுதான ஆழ்துளை கிணற்றை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை ஊராட்சி நிர்வாகத் திற்கு தெரிவித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.