districts

img

அண்ணாமலையால் ஆப்பசைத்த குரங்கானது பாஜக!

கோவை, பிப்.27- கோவையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஜகவில்  இணைகிறார்கள் என பாஜக தலை வர் அண்ணாமலை பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இத னையடுத்து திங்களன்று தனியார்  நட்சத்திர ஹோட்டலில் கோவை  மாவட்டத்தின் மொத்த செய்தியாளர் களையும் வரவழைத்து, இணைப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

தெறித்து ஓடிய பாஜகவினர்
இதில், ஒன்றிய அமைச்சர் எல்.  முருகன், வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் துணைத்தலைவர்  கே.பி.ராமலிங்கம் ஆகியோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்தி ருந்தனர். ஆனால் ஒருவர் கூட வரா ததால் பெரும் ஏமாற்றம் அடைந்து,  இணைப்பு விழா ஒத்திவைக்கப்படு வதாக அறிவித்தனர். இதுகுறித்து  கேள்வி எழுப்பிய செய்தியாளர் களிடம் வாக்குவாதம் நடத்திவிட்டு பாஜகவினர் தெறித்து ஓடினர்.

அதிர்ச்சி அளித்த  அதிமுக தலைவர்கள்
இந்நிலையில்தான் பிரதமர் மோடி பல்லடம் வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, பாஜகவின் 4 எம்எல்ஏக்களில் 2 எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனி சாமி முன்னிலையில், அதிமுக-வில்  இணைய உள்ளதாக அறிவித்து  கோவை மாவட்ட அதிமுக தலை வர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

பாஜகவின்  அரசியல் அறமற்றது
கோவை மாவட்ட அதிமுக அலு வலகத்தில், அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல் யாணசுந்தரம் மற்றும் கோவை மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம் மன் அர்ச்சுணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பாஜக எம்எல்ஏக்களை நாங்கள் பிடிக்க உள்ளோம்
அப்போது, கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்  பினர் அம்மன் அர்ச்சுணன் பேசுகை யில், “இல்லாத ஒன்றை பாஜக  வினர் பரப்பினார்கள். ஆனால் இப்போது நான் சொல்கிறேன். பாஜகவைச் சேர்ந்த 2 எம்எல்ஏக் கள் எடப்பாடி முன்னிலையில் அதி முகவில் இணைகிறார்கள். அது  கொங்கு மண்டலமாகவும் இருக்க லாம், தென் மண்டலமாகவும் இருக்  கலாம்” என்று அதிரடியைக் கிளப்பி னார்.

இது வடக்கு கிடையாது; தமிழ்நாடு
“அதிமுகவினர் உயிரைக் கொடுத்து உழைத்து பாஜக-வை  வெற்றிபெற வைத்தோம். இப் போது பாஜக பிள்ளை பிடிக்கும் வேலையை செய்கிறது. இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள்  அஞ்ச மாட்டோம். இது வடக்கு கிடையாது, தமிழ்நாடு. அதிமுக-விலிருந்து ஒரு தொண்டனையும் பாஜகவில் இணைக்க முடியாது.  முடிந்தால் சாதாரண தொண்டனை யாவது கொண்டு போ பார்க்க லாம்” என்றும் சவால் விட்ட அர்ச்சு ணன், “பல்போன வயதானவர் களையும், எதற்கும் உபயோகம் அற்றவர்களையும்தான் பாஜக பிடிக்க முடியும்” என்றார்.

“கோவையில் பாஜக வெற்றி பெற்றால், நான் அரசியலை விட்டே  விலகுகிறேன்” என்று உச்சகட்ட ஆவேசம் அடைந்தார்.

இதனால், அடுத்தகட்சி எம்எல்ஏக்களுக்கு ஆசைப்பட்டு, எங்கே தங்களின் எம்எல்ஏ-க்களை  பாதுகாக்க முடியாமல் போய் விடுமோ என்று ஆப்பசைத்த குரங்கு நிலைக்கு பாஜக தள்ளப் பட்டுள்ளது.

மோடியைப் பல்லடம் அழைத்து வந்து அவமானப்படுத்திய அண்ணாமலை
‘என் மண், என் மக்கள்’ யாத்தி ரையை நடத்தி வந்த பாஜக தலை வர் அண்ணாமலை, அதன் நிறைவு விழாவுக்கு பிரதமர் மோடியை வம்படியாக அழைத்திருந்தார். மாற்றுக் கட்சியினர் பல ஆயிரம்  பேர் பாஜகவில் சேருகிறார்கள்... குறிப்பாக பிரதான எதிர்க்கட்சி யான அதிமுகவின் கொறடாவும் முக்கியத் தலைவருமான எஸ்.பி.  வேலுமணி, எம்எல்ஏ அம்மன் அர்ச்  சுணன் உள்ளிட்ட பலர் வருகிறார்  கள்.. என்று சொல்லித்தான் பிரத மர் மோடியை பல்லடத்திற்கு அழைத்து வந்தார். கடைசியில் எல்லாம் தலைகீழாகி விட்டது. ‘என்  மண், என் மக்கள்’ என்ற அண்ணா மலையின் கனவில், மக்கள் மண்ணை  கொட்டியுள்ளனர். அண்ணாமலை யை நம்பி வந்த பிரதமர் மோடியும் அவமானப்பட்டடதுதான் மிச்சமாகி இருக்கிறது.