திருப்பூர், அக்.24 – ஊத்துக்குளி அருகே உள்ள சக்தி இன்ஜினியரிங் தொழிலாளர்க ளுக்கான போனஸ் உடன்பாடு எட் டப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி வட்டம், பல்லகவுண்டம்பாளை யத்தில் சக்தி ஆட்டோ காம் பொனென்ட்ஸ் என்ற இன்ஜினியரிங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நான்கு சக்கர வாகனங்க ளுக்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு 40 % போனஸ் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் மற் றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் நிர் வாகத்திடம் கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. இதன் அடிப்படை யில் மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இவ்வாண்டிற்கான போனஸாக 17.75% வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது. மூன்று கட்டப் பேச்சு வார்த் தைக்குப் பிறகு வியாழக்கிழமை உடன்பாடு கையெழுத்தானது. இப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில் முதுநிலை துணைத்தலை வர் (இயக்கம்) ஜி.திருநாவுக்கரசு, தலைவர் (மனித வளம்) துரைசாமி, தலைமை நிதி அலுவலர் கண்ணா, முதுநிலை பொது மேலாளர் (தொழில் உறவு) கே.ஆர்.ராஜேந்தி ரன், உதவி பொது மேலாளர் (மனித வளம்) கே.கே. தமிழரசன், உதவி பொது மேலாளர் (தொழில் உறவு) பரமேஸ்வரன் ஆகியோரும், தொழிற்சங்க தரப்பில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.கண்னையன், சங்கத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி, பொரு ளாளர் எஸ்.கே.சந்திரமூர்த்தி மற்றும் வி.காமராஜ், ஆர்.சிவராஜ், கே. அர்ச்சுனன், எம்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பலனாக குறைந்தபட்சம் ரூ. 38 ஆயிரம் முதல் ரூ.46 ஆயிரம் வரை அனைத்து தொழிலாளிகள் மற்றும் ஊழியர்கள் பெறுவார்கள். மேலும் தீபாவளி பண்டிகைக்கு அனைவருகுக்கு தலா 1 கிலோ ஸ்வீட், 1 கிலோ காரம் பெறுவார்கள். சிஐடியு திருப்பூர் மாவட்ட இன்ஜி னியரிங் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்க செயலாளர் ஜெ. கந்தசாமி இத்தகவலை தெரிவித் துள்ளார்.