தருமபுரி, மே 21- பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திங்களன்று இரவு கனமழை பெய்ததால் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் சாலை, கடைவீதி சாலை போன்ற பகுதிகளில் மழைநீரு டன் கழிவுநீர் கலந்து சென்றதால் மக்கள் கடும் அவதிய டைந்தனர். தமிழகத்தில் தற்பொழுது கோடை மழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரு கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய் யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூ ராட்சி பகுதிகளில் திங்களன்று இரவு கனமழை பெய்தது. இத னால், பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் சாலை, கடை வீதி சாலை போன்ற பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும், சாலை ஓரம் உள்ள வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்ததால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் சாலையின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய் சரி செய்யாத காரணத்தினால் தான் இது போன்று மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.