சேலம், டிச.11- தேசிய அளவில் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் காடையாம்பட்டி வட்டக் குழு சார்பில் இரண்டாவது கோரிக்கை மாநாடு வட்ட தலைவர் எஸ்.ஜெயக் கொடி தலைமையில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் வி.அமிர்தலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் வி.தங்கவேல்,, மாவட்ட செய லாளர் ஜி.கணபதி, சங்கத்தின் துணைத் தலைவர் எம்.சின்ராஜ், ஆர்.ரவிக் குமார், சிபிஎம் தாலுகா செயலாளர் என். ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர். இம்மாநாட்டில் நகர்ப்புற வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலையை உத்தரவாதப்படுத்த வேண் டும். பணியில் ஈடுபடும் தொழிலாளர் களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் மற்றும் 200 நாள் வேலை வழங்க வேண் டும். காடையாம்பட்டி தாலுகாவில் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாகவும், வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். விவ சாய தொழிலாளர்கள் குடும்பங்க ளுக்கு கல்வி, திருமணம், விபத்து மர ணம், இயற்கை மரணம், ஓய்வூதியம், மகப்பேறு உதவி ஆகியவை வழங்க வேண்டும். தேசிய அளவில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.