சேலம், ஜன.10- தமிழ்நாட்டு மக்களுக்கும், அமைச் சரவைக்கும் விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன் றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம், சிபிஐ உள் ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டபேரவையில் அரசின் நிலைப்பாட் டிற்கு மீறி தன்னிச்சையாக ஆளுநர் உரையை வாசித்தார். இதனை கண் டித்து முதல்வர் உடனடியாக ஆளுநர் உரை மீது வருத்தம் தெரிவித்து, அர சின் நிலைப்பாட்டிற்கு எதிராக உரை யாற்றியது, மற்றும் அண்ணல் அம் பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள் ளிட்ட தலைவர்களின் பெயரை கூறா மல் தானாகவே ஓர் அறிக்கையை வாசித் ததை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்றினார். மேலும், எதிர்க் கட்சிகள் அனைவரும் ஆளுநர் ஆர். என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், இதே கோரிக்கை களை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமு முக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகி யவை இணைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது, ஒன்றிய பாஜக அர சின் தூதுவராக செயல்படும் ஆளுநர் ரவியை கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இத னால் திமுக அவைத்தலைவர் சுபாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மூசா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ் கரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை
கோவையில் டாடாபாத், பவர் ஹவுஸ் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் கருப்புசாமி, மதிமுக சார்பில் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, கொதேமக கிழக்கு மாநகர செயலாளர் ஆர்.சி.தன பால் உட்பட மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்பினர், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட னர். சூலூரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தபெதிகவினர் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தபெதிக அமைப்பு செயலாளர் ஆறு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அப்போது, ஆளுநரின் உருவ பொம்மையையும், உருவப்படத்தை யும் எரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் காவல் துறையினர் கைது செய்த னர்.
நீலகிரி
கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வாசு தலைமை வகித்தார். இதில், விசிக மாவட்ட செயலாளர் சகா தேவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி யினர் மற்றும் முற்போக்கு இயக்கங் களை சேர்ந்த திரளானோர் பங்கேற்று ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.