சாக்கடை குழாய் உடைப்பால் சுகாதார சீர்கேடு
மே.பாளையம், ஜூன் 14- மேட்டுப்பாளையத்தில், பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகா தார சீர்கேடு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.99 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மேட்டுப்பாளை யம் நகராட்சிக்கு உட்பட்ட 33 ஆவது வார்டு பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டம் மூலம் வெளியேற்றப்ப டும் கழிவு நீர் குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறு முகை செல்லும் சாலையில் உள்ள சங்கர் நகர் என்னும் பகுதி யில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளி யேறி சாலை முழுவதும் ஓடியதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. சாலையோரம் பதிக்கப்பட்ட குழாய் பகுதியில் டிப்பர் லாரி மோதியதால் உடைப்பு ஏற்பட்டதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதன் வழியே செல்லும் கழிவு நீர் உடனடியாக நிறுத்தப்பட்டு உடைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீரூற்று போல் சாலையோரம் கழிவு நீர் பீய்ச்சியடித்த காட் சியை அங்கு வசிக்கும் மக்கள் பதிவு செய்து சமூக வலைத்த ளங்களில் பரவலாக்கி வருகின்றனர்.
காய்கறி விலை கடும் உயர்வு
கோவை, ஜூன் 14- கோவை மற்றும் பொள்ளாச்சி காய்கறி சந்தைகளில் தக் காளி, சின்ன வெங்காயம் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட, காய்கறி சந்தைக்கு மேட்டுப்பாளை யம், தொண்டாமுத்தூர், ஆலந்துறை உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்தும், பொள்ளாச்சி சந்தைக்கு ஒட்டன் சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலி ருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளியன்று நிலவரப்படி தக்காளி மற் றும் சின்ன வெங்காயம் ரூபாய் 70 க்கும், கேரட் 60 ரூபாய், பீன்ஸ் 100 ரூபாய், பச்சை மிளகாய் 100 ரூபாய் என காய்கறிக ளின் விலை உயர்ந்தே காணப்பட்டது. இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. விலை உயர்ந்து இருந்தபோதிலும், அத்தியாவசிய தேவைகளுக்கு காய்க றிகளை வாங்குவதற்காக சந்தையில் அதிகளவு பொது மக்கள் வந்திருந்தனர்.
அணைகள் நிலவரம்
பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 57.52அடி(105)
நீர்வரத்து: 607 கனஅடி
நீர் வெளியேற்றம்: 155 கனஅடி
மேட்டூர் அணை
நீர்மட்டம் : 43.100 அடி
நீர்வரத்து: 149 கனஅடி
நீர் வெளியேற்றம்: 1500 கனஅடி
மழையளவு : 1.8 மிமீ
சோலையார் அணை
நீர்மட்டம்:56.63/160 அடி
நீர்வரத்து:388.40கனஅடி
நீர் வெளியேற்றம்: 20 கன அடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:12.95/72 அடி
நீர்வரத்து: 328 கனஅடி
நீர் வெளியேற்றம்:107 கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:80.00/120அடி.
நீர்வரத்து:115கனஅடி.
நீர் வெளியேற்றம்: 32 கனஅடி.