districts

img

கால்நடைகளை பாதுகாக்க மாதிரி பட்டி

ஈரோடு, பிப். 23- கால் நடைகளை நாய் கள் கடித்து கொன்றுவிடும் சூழலில் நாய்கள் உள்ளே செல்ல முடியாதவாறு ஆட்டு  பட்டி தயார் செய்யப்பட்டுள் ளது, இதனை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.  விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக பட்டி அமைத்து ஆடுகளை பராமரிப்பது குறித்த செயல் விளக்கம் ஈரோட்டில் சனி யன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்  சு.முத்துச்சாமி பங்கேற்றார். அப்போது அவர்  பேசுகையில், சமீப காலமாக தெருநாய்க ளின் தொல்லை அதிகமாகியுள்ளது. வெறி நாய்கள் கீழே குழியைப் பறித்தோ அல் லது ஏதோ ஒரு வகையில் உள்ளே சென்று  ஆடுகளை கடித்து விடுகிறது. ஒரு பட்டி யிலேயே 15, 20 ஆடுகளைக் கொன்று விடு கிறது. கடந்த 6 மாத காலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள்  புயல், கடும் மழை போன்ற பேரிடர் காலத்தில் தான் பயன்படுத்த முடி யும். ஆனால் இதுபோல விலங்குகள் கடித்து  அதன் மூலமாக ஏற்படுகிற உயிரிழப்புக ளுக்கு கொடுப்பதற்கு எந்த குறிப்பும் அதில்  இல்லை. எனவே முதலமைச்சர், அதுகுறித்து  ஆய்வு செய்து, கொடுப்பதாக சொல்லியிருக் கிறார்.  ஆடு வளர்ப்பவர்கள் பட்டியை இன் னும் பாதுகாப்பாக செய்ய வேண்டும். எனவே  அதற்கு ஒரு மாதிரியைத் தயார் செய்து  வைத்திருக்கிறோம். அதற்குள் நாய் செல்ல  வாய்ப்பிருக்காது என்று நம்புகிறோம். அந்த  பட்டி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு பயன்படும் என்பதை ஆடு வளர்ப்போர்தான் பார்த்து சொல்ல வேண்டும். இதைப் பயன்படுத்தி பார்த்து மாற்றம் தேவைப்பட்டால் செய்யலாம். என் றார்.