districts

img

‘அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா’

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியின் 29 ஆவது பட்டமளிப்பு விழா இரும்பாலை சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மணிகண்டன் தலைமை வகித்தார். இவ்விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.