districts

img

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

பள்ளிபாளையம், மே 31- நாமக்கல் அருகே உள்ள கோயிலில் உண்டி யலை உடைத்து கொள் ளையடிக்கப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த கோட்டைமேடு பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 36 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். வழக்கம்போல் கோயிலின் பூசாரி பூஜை களை முடித்துக் கொண்டு இரவு பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இரவு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் செவ்வாயன்று அதிகாலையில் காவலர்  எழுந்து  பார்த்தபோது, கோயிலின் பின்பக்க நுழைவு வாயில் கதவு  உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கோயில் மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.  இதையடுத்து காவலர், கோயில் நிர்வாகி மற்றும் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயிலில் மாசி மாத திருவிழா முடிந்து இதுவரை உண் டியல் திறக்கப்படாத நிலையில், உண்டியலில் சுமார் 2  லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், சுமார் ஐந்து பவுன்  நகையும் இருக்கக்கூடும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித் தனர். இதனைத் தெரிந்தவர்கள் தான் கொள்ளையில் ஈடு பட்டிருக்க கூடும் என தெரிவித்தனர்.  கடந்த வருடம் இதே போல் கொள்ளை நடைபெற் றுள்ளது. ஆனால், இது வரை கொள்ளையாளர்கள் கண்டு பிடிக்க முடியவில்லை. இக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்காணிப்பு கேமரா பழுதாகி உள்ளது. இதையறிந்தவர்கள்தான் தொடர் கொள்ளை ஈடுபட்டு இருப் பார்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

;