districts

img

சேலத்தில் பாஜகவின் புகார்: சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுப்பு

சேலம், டிச.23- மாநகரின் அழகை கெடுக் கும் அரசியல் கட்சிகளின் சுவ ரொட்டிகளை அகற்ற வேண் டும் என சேலம் ஆட்சியர் அலு வலகத்தில் பாஜகவினர் புகார ளித்த நிலையில், “முதலில் உங்க கட்சி போஸ்டரை அகற் றுங்கள்” என சமூக வலைத்த ளங்களில் வறுத்தெடுத்த இனையதள பகிர்வுகள் வைரலாகி வரு கிறது.  சேலம் மாநகரத்தில் உள்ள பாலங்க ளில் உள்ள தூண்களில் அரசியல் கட்சி கள் மற்றும் விளம்பர நிறுவனங்களின் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதில், பாஜகவினரின் சுவரொட்டிகளும் அடங் கும். இந்நிலையில், சேலம் மாநகரின் அழகை கெடுக்கும் விதத்தில் மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி களை உடனடியாக அகற்ற வேண்டும் என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார். இதனிடையே, சேலம் நான்கு ரோடு சிக்னலில் மேம்பால தூண்களில் அதிகம் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சி போஸ் டர் பாஜகவினரால் தான் ஒட்டப்பட்டுள் ளது. பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில், மேற்கண்ட பகுதியில் பாஜக வினர் தொடர்ந்து மேம்பால தூண்களில் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி வரு கின்றனர். இந்நிலையில், “தங்கள் கட்சி சுவ ரொட்டிகள் உள்ளதா? என பார்த்து விட்டு அறிக்கை கொடுத்தால் நன்றாக  இருக்கும் எனவும், முதலில் உங்க கட்சி யின் போஸ்டர்களை அகற்றுங்கள்; அப் போது தான் மாநகரின் அழகு மிளிரும் என சமூக வலைத்தளங்களில் இளைஞர் கள் ஏராளமானோர் ஆதாரத்துடன் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.