கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. செப். 17 தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, கோட்டயம் மாவட்ட ஆட்சியர் ஜான்.வி.சாமுவேல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.