நாமக்கல், பிப்.21- குமாரபாளையத்தில் நடைபெற்ற தாய்மொழி தின விழாவில், டிப்ளமோ-வில் தமிழ் வழிக்கல்வியை அமல் படுத்த வேண்டும், என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் வெள்ளி யன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட கத்தேரி அரசு மேல்நிலைப்பள்ளி தமி ழாசிரியர் பங்கஜம், தாய் மொழியின் மகத்துவம், கல்வி, கற்றல் சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து உரையாற்றி னார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கல்லூரி முதல்வர் செ. விஜயகுமார் கூறுகையில், தமிழ்நாட்டில் டிப்ளமோ பயிலும் மாணவ, மாணவிகள் 90 சதவிகிதம் பேர் அரசுப்பள்ளியில் பயின்றவர்கள். டிப்ளமோ தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த வடிவில் எழுத அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் தேர்வு மற்றும் பாட புத்தகங்கள் ஆங்கி லம் மற்றும் தமிழ் வழியில் வழங்கப்படுகிறது. அதுசமயம், முதலாம் ஆண்டு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், மாணவ, மாணவிகள் மூன்று ஆண்டுகளில் நடைபெறும் ஆறு பருவத் தேர்விலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு எழுதுகின்றனர். பட்டயப் படிப்பு முடித்த பின்பு, மாணவ மாணவிகளுக்கு ஆங்கில வழிக்கல்வி என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளியில் பயின்ற டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு வேலைக்குச் செல்லும் போது ஆங்கில வழிக் கல்வி என்று சான்றிதழ் உள்ளதால், அவர்கள் அரசு வேலை பெறுவதில் முன்னுரிமை இழக்க நேருகிறது. எனவே, டிப்ளமோ பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வழிக்கல்வி என்ற சான்றிதழ் வழங்கினால், டிப்ளமோ பயின்ற ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க உறுதுணையாக இருக் கும். எனவே, இதற்கு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உரிய ஆவணம் செய்ய வேண்டும், என் றார். இந்நிகழ்வில், தமிழ் பற்றை அனைவருக்கும் நினைவு கூறும் வகையில், ‘தமிழ்’ வடிவத்தில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தபடி நின்றனர்.