அவிநாசி, ஜன.31- அவிநாசி, அசநல்லிபாளையம் வழித்தடத்தில், நிறுத்தப் பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அவிநாசி ஒன்றியம், வேட்டுவபாளையம் ஊராட்சி அச நல்லிபாளையம் பகுதி மக்கள், கிராமப் பகுதிக்கு வழக்க மாக 3அ/9இ, 12ஆ/12ஈ ஆகிய இரு புறநகர் பேருந்து களில் மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். கொரோனா காலத்துக்கு பிறகு, இரு பேருந்துகளும் வழித்தடத்தில் வந்து செல்வதில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல் வோர், பனியன் நிறுவனம் உள்ளிட்ட வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று பேருந்துக்கு செல்ல வேண்டியுள்ளது. உடனடியாக வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு பேருந்துகளையும் மீண்டும் இயக்க கோரி வியாழ னன்று நடைபெற்ற உங்களைத் தேடி, உங்கள் ஊர் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.