districts

img

இடைத்தேர்தல்: ஜவுளிகளை கொண்டு செல்ல தயக்கம்

நாமக்கல், ஜன.10- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், ஜவுளி களை கொண்டு செல்ல வியாபாரி கள் தயக்கம் காட்டி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஏராளமான விசைத் தறிக்கூடங்கள் உள்ளன. விசைத் தறித் தொழிலை நம்பி ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். லுங்கி, பாலிஸ் டர் துண்டு, ரயான், வெள்ளை பீஸ்  எனப்படும் ஜவுளிகள் உள்ளிட்ட வைகள் இங்கு உற்பத்தி செய்யப் பட்டு, ஈரோடு, திருப்பூர் மற்றும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக் கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப் பினராக செயல்பட்டு வந்த காங்கி ரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் உடல் நலக்குறைவால் காலமானதால், அத்தொகுதி காலி யாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்.5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. இதன் கார ணமாக ஈரோட்டில் தேர்தல்  நடத்தை விதிகள் அமலுக்கு வந் துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் உள்ளிட் டவை கொடுப்பதை தடுக்கும் வகை யில் ஈரோடு மாவட்ட எல்லையான  கருங்கல்பாளையம் பகுதியில் தினந்தோறும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகிறனர். இதனால் உரிய ஆவணங்கள் இன்றி ஜவுளிகள் மற்றும் பணம் உள்ளிட்டவகளை கொண்டு வர வேண்டாம் என ஏற் கனவே தேர்தல் ஆணையம் அறிவு றுத்தியுள்ளது. இந்நிலையில், ஜவுளிகளை பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு கொண்டு செல்வதற்கு வியாபாரிகள் தயக் கம் காட்டுகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையத் தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒரு வர் கூறுகையில், ஈரோடு கிழக்கு  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  என்பது தவிர்க்க முடியாத ஒன்று  என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால்,  இந்த அறிவிப்பானது பொங்கல்  பண்டிகை முடிந்த பிறகு அறி வித்திருந்தால் ஓரளவுக்கு ஜவுளி களை கொண்டு செல்வதில் எங்க ளுக்கு சிரமம் ஏதும் ஏற்பட்டிருக் காது. தற்போது சரியாக பொங்கல்  பண்டிகை சீசன் காலத்திலேயே  இடைத்தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள் ளோம். வெளி மாவட்ட, மாநில  வியாபாரிகளும் எங்களிடம் ஜவுளி களை வாங்க, தேர்தல் நடத்தை விதி களை காரணம் காட்டி தயக்கம் காட்டுவதால் ஜவுளிகள் தேக்க மடைந்து வியாபாரம் பாதிக்கப்பட் டுள்ளது, என்றார். ஜவுளி மாநகர மாக திகழும் ஈரோட்டில் பல்வேறு  ஜவுளிக்கடை உரிமையாளர்களின் கவலை தோய்ந்த குரலாக இதே கருத்தை தான் முன்மொழிகிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.