சேலம், ஜூன் 25- சேலத்தில் தகர கொட்டகை அமைக்கும் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரி ழந்த நிலையில், நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி, முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் மகன் தினேஷ் (27). இவர் கடைகளுக்கு தகர கொட்டை அமைக்கும் பணி செய்து வருகிறார். இந்நிலையில், சேலம், கல்லாங் குத்து தெருவிலுள்ள ‘செட்டிநாடு சூப் ஸ்டால்’ கடைக்கு மேல் பகுதியில் செவ்வாயன்று தகர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக ‘தகர சீட்’ மின்சார கம்பி மீது மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தினேஷ் மயக்கமடைந்தார். மேலும், தகர சீட் அவர் மீது மோதிய தால் காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறி யது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் நகர காவல் துறையினர், தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்து வமனை பிரேத பரிசோதனை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த தினேஷிற்கு 20 வயதில் பட்டதாரி மனைவி உள்ளார். அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த நிலை யில், அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.