districts

img

சிக்கண்ணா கல்லூரியில் ஊர்க்காவல் படையினரின் ஒத்திகை அணிவகுப்பு

திருப்பூர், ஆக.13- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மைதானத்தில்  செவ்வாயன்று ஊர்க்காவல் படையினரின் ஒத்திகை அணிவ குப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 78ஆவது சுந்தர தினத்தை முன்னிட்டு திருப்பூர்  சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர் வாகம் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. தேசிய  கொடியேற்றிய பின்பு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்  கொள்ள இருக்கிறார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி செவ்வா யன்று சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது. முன்னதாக ஊர் காவல் படையினரின் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர்க்காவல் படையினர் சீருடை அணிந்து காவல்துறையினரின் டிரம்ஸ் இசைக்கு ஏற்றவாறு அணிவகுத்து நடந்து சென்ற னர். நாளைய தினம் சுதந்திர தின விழா கொண்டாட உள்ள  நிலையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் வளாகம்  முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்றது.