districts

img

100 நாள் வேலைக்கு கூலி குறைப்பு: தொழிலாளர்கள் நூதன போராட்டம்

உளுந்தூர்பேட்டை,ஜூன் 19- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் களமருதூர் ஊராட்சியில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் தினக்கூலியாக 130 ரூபாயை மட்டும் பய னாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்திய தைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சட்டக் கூலி 256 ரூபாய் வழங்கக் கோரியும், சட்டவிரோதமாக கூலியை குறைத்து வங்கிக் கணக்கில் செலுத்திய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் திருநாவ லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் தலைவர் பி.சுப்பிரமணியன், செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றியத் தலை வர் கே.கே.கொளஞ்சி, பொருளாளர்  எம்.ராஜீவ் காந்தி, சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் டி.எஸ்.மோகன், ஜெ.ஜெயக் குமார், பி.அருள் உள்ளிட்ட  100 பேரை  காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் சங்கத் தலைவர்களுடன் ஊராட்சி  ஒன்றிய ஆணையர் செந்தில் நடத்திய பேச்சு வார்த்தையில், முழுமையான கூலி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

;