திருப்பூர், பிப்.25 – பனியன் மற்றும் பின்னலா டைத் துறையில் வேலை செய்யும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து அறிவித்து தொழிலாளர் நலத்துறை வஞ்சித்துள்ளது. அந்த அநீதியைப் போக்கி, தொழிலாளர் களுக்கு சட்டப்படி நியாயமான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சிஐடியு பனியன் அன்டு பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் அறிவிப்பு தமிழ்நாடு அரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறைந்தபட்ச ஊதியச் சட் டத்தின்படி, கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி குறைந்தபட்ச ஊதியத்தை புதிதாகத் திருத்தி அறிவித்து அர சாணை வெளியிட்டுள்ளது. இதில் பனியன் மற்றும் பின்ன லாடை உற்பத்தி துறையில் கட்டிங், டெய்லரிங், அயனிங், பேக்கிங், பேப்ரிகேஷன், செக்கிங், கைமடி, ஹெல்பர் உள்ளிட்ட பல பிரிவு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் திருத்தி நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இத்துடன், அகவி லைப்படி விபரமும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதில் சென்னை நகர விலைவாசி குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டு 196 புள்ளிகள் அடிப்ப டையில், மாதம் ரூ.23.19பைசா வழங்குவதாக நிர்ணயித்துள்ளது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு இழப்பு ஆனால் ஓராண்டுக்கு முன்பு கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, இதே தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வெளியிட்ட குறைந்தபட்ச ஊதிய புதிய திருத்த அறிவிப்பில், 2010ஆம் ஆண்டு 161 புள்ளிக ளுக்கு, மாதம் ரூ.28 அகவிலைப் படி வழங்குவதென தெரிவிக்கப் பட்டிருந்தது. அதாவது கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட வரைவு அறிக்கையில் சொல்லியி ருந்த அகவிலைப்படி கணக்கீட்டு விபரத்தை மாற்றி, தற்போது வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அகவிலைப்படியைக் கடுமையாகக் குறைத்துள்ளனர். முந்தைய கணக்கீட்டுப்படி தொழிலாளிக்கு அகவிலைப்படி யாக மாதம் ரூ.5152 கிடைத்திருக் கும். ஆனால் தற்போது வெளியிட் டுள்ள கணக்கீட்டின்படி ரூ.3455.31 பைசா மட்டுமே கிடைக்கும். அகவி லைப்படியை குறைத்ததன் மூலம் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக மாதம் ரூ.1700 வீதம் குறைகிறது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு இதுபோல் குறையும் என்று சிஐ டியு பனியன் மற்றும் பொது தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் கூறினார். ரூ.26 ஆயிரம் வழங்க கோரிக்கை ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குறைந்தபட்ச ஊதிய முன்மொழிவில் மாற்று கருத்துக்கள், ஆலோசனைகளை அனுப்பும்படி தொழிலாளர் நலத் துறை கேட்டிருந்தது. அதற்கேற்ப, ஒரு தொழிலாளிக்கு மாதம் குறைந் தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு சார் பில் தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். 100 நாள் வேலையை விட குறைவான கூலி இது குறித்து ஜி.சம்பத் கூறிய தாவது: கடுமையான விலைவாசி உயர்வில் தொழிலாளர்கள் குடும் பங்களும், சாமானிய மக்களும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை விலைவாசி குறியீட்டு எண்ணின் அடிப்படையில் வழங்க வேண்டிய பஞ்சப்படியைக் குறைத்து வஞ்சித் துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் பனியன் தொழிலில் லேபிள், கைமடி, டேமேஜ், அடுக் கிக் கட்டுதல் ஆகிய நான்கு பிரிவு தொழிலாளர்களுக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதி யம் கிராமப்புற நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு நிர்ண யித்துள்ள ரூ.319-ஐ விடக் குறைவாக இருப்பது பெரும் அவ லம் ஆகும். அத்துடன், 2016ஆம் ஆண்டு பனியன் மற்றும் பின்னலாடைத் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒன்பது ஆண்டுகளுக் குப் பிறகு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாற்றி அறி வித்துள்ளதே மிகவும் தாமதமா னது. திருப்பூரில் தொழிற்சங்கங் களுக்கும், உற்பத்தியாளர் சங் கங்களுக்கும் இடையே நான் காண்டு சம்பள ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்டு அதன்படி சம்பளம் வழங் கப்பட்டு வருகிறது. தற்போது தொழிலாளர் நலத்துறை அறிவித் துள்ள குறைந்தபட்ச ஊதியம், நடைமுறையில் உள்ள ஒப்பந்தச் சம்பளத்தை விடவும் குறைத்து நிர்ணயித்திருப்பது லட்சக்கணக் கான தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே, அபரிமிதமாக உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு குறைந் தபட்ச ஊதியம் கிடைப்பதை உறு திப்படுத்த வேண்டும். தற்போது அறிவித்துள்ள அநீதியான குறைந் தபட்ச ஊதிய அரசாணையை மறு பரிசீலனை செய்து, 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட அறிக்கைப்படி அகவிலைப்படி கணக்கிட்டு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என் றும் சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச்செய லாளர் ஜி.சம்பத் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.