districts

img

சாலைகளில் தேங்கிய மழைநீர்!

கோவை, அக்.20- கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து  மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை மற்றும்  வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், சனியன்று காலை முதல் மேக மூட் டம் இருந்து வந்த நிலையில், மாலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், புலியகுளம், பந்தய சாலை, உக்கடம், காந்திபுரம் என பல்வேறு பகுதிகளில் ஒரு மணி  நேரம் மழை பெய்தது. இந்த மழை காரணமாக அவிநாசி  சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட  முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, ராமநாதபுரம் சந்திப்பு மற்றும் அவிநாசி சாலை களில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற் குள்ளாகினர். முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இப்பகுதி யில் மழை நின்ற பின்னர் தண்ணீர் வடிந்து இயல்பான சூழல்  ஏற்பட்டது. மாலை வேளையில் பெய்த மழை காரணமாக, அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ஊழியர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து ஞாயிறன்று காலை வெயில் அடித்த நிலையில், மாலை மேக மூட்டம் காணப்பட்டு, மழை பெய் தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.