districts

img

சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்

திருப்பூர், ஆக.31- பெருமாநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை  பெய்ததால், சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், அய்யம்பாளை யம், கணக்கம்பாளையம், வாஷிங்டன் நகர், பொங்குபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் சனியன்று பலத்த மழை பெய்தது.  இதனால், பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மேலும்,  சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால், போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.