திருப்பூர், செப்.29- திருப்பூர் மாவட்டத்தில் சனியன்று இரவு பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் கார ணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் சனியன்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்தது. திடீரென இரவு பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாநகர், பெருமாநல்லூர், ஊத்துக்குளி சாலை, பல்ல டம் சாலை, பாண்டியன் நகர், மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை மழை பெய்தது. இதனால் ஞாயிறன்று குளிர்ச்சி யான சூழல் நிலவியது.