districts

img

தருமபுரி எம்.பி.யின் முயற்சியால் ரயில்வே பாலம் சீரமைப்பு

தருமபுரி, அக்.13- தருமபுரி,எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில் அடியில் நிற்கும்  தண்ணீரை அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவ டிக்கை யெடுத்துவருவதை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி எஸ். செந்தில்குமார் பார்வை யிட்டார். தருமபுரி நகராட்சிக் குட்பட்ட அப்பாவு நகரில் இருந்து எம்ஜிஆர் நகர் செல்வதற்கு ரயில்வே பாலம் கீழே சப்வே  உள்ளது. இதில்் மழை காலங்களில்  5 அடியிலிருந்து 6 அடி வரையிலான நீர் தேங்குகிறது. இதனால் எம்ஜிஆர் நகருக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பிடமனேரி வழியாக சுற்றி வர வேண்டி யுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழை நீருடன் அங்கு இருக்கக்கூடிய கால்வாய் கழிவுநீரும் கலந்து அசுத்த நீராக தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் அப்பகுதி மக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும்  நுழைவாயில் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. ஆகவே  இதுகுறித்து எம்ஜிஆர் நகர் பொது மக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் செந்தில்குமாரிடம் கோரிக்கை  மனு வழங்கினர்.  இதுகுறித்து  நாடாளு மன்ற உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்  ரயில்வே துறையிடம் அப்பாவு  நகரில் இருந்து எம்ஜிஆர் நகருக்கு செல்லக்கூடிய பகுதியிலுள்ள பாலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் சீர் செய்யு மாறு கடிதம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 13ஆம் தேதியன்று  ரயில்வே துறை சார்பில் பாலத்தில் தேங்கி உள்ள நீரை வெளியேற்றி, மழைநீர் தேங்காத வண்ணம் வடிநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனை எம்.பி  செந்தில் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.  இதனை தொடர்ந்து எம்.பி. செந்தில் குமார் நிருபர்களிடம் கூறியதாவது, எம்ஜிஆர் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால்  மழை காலங்களில் இப்பகுதி மக்கள் வெளி யிடங்களுக்கு செல்ல முடியாமல் பாலத்தில்  நிற்கும் மழை நீர் தேங்கி மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். மேலும் இந்த மழை நீருடன் கழிவுநீரும் கலப்பதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்பட அதிக  வாய்ப்புள்ளது. எனவே இவற்றை சரி செய்ய தற்போது ரயில்வே துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. ஆகவே இனிமேல் மழை நீருடன் கால்வாய் கழிவுநீர் சேர வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த சப்வே மிகவும் பள்ளமாக உள்ளதால், மழை காலங்களில் இந்த சப்வேயில் 2 முதல் 3 அடி வரை மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சப்வேயில் எப்பொழுதும் ஒரு மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்ற வேண்டு மென ரயில்வே துறையிடம் தெரிவித்துள் ளதாக கூறினார்.              

;