districts

img

கோவையில் 625 தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு

கோயம்புத்தூர், ஜூலை 13 - கோயம்புத்தூர் மாவட்டத்தில் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கு முதற்கட்ட மாக சேகரிக்கப்பட்ட 625 சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஜூலை 1 துவங்கி தமிழகம் முழு வதும் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா  சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வரு கிறது. இதனொரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழுக்  கள், கிளைகள், தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் வர்க்க வெகு ஜன அமைப்புகள் தீக்கதிர் நாளித ழுக்கான சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்  குழு கூட்டம், காந்திபுரம் மாவட்டக் குழு அலுவலகத்தில், செயற்குழு உறுப்பினர் வி.ஆர். பழனிச்சாமி தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. 

இதில், கட்சியின் மாநில செயற்  குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன்,  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்ட கட்சி யின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்  குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

அப்போது, தீக்கதிர் சந்தா சேர்ப்பு  இயக்கத்தின் மூலம் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 529 ஓராண்டு சந்தா, 96 ஆறு மாத சந்தா என மொத்தம் 625 சந்தாவுக்கான தொகை 11 லட் சத்து 67 ஆயிரத்து 850 ரூபாய் தலை வர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்  வில், தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், விநியோக மேலாளர் நெல்சன் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.