திருப்பூர், பிப். 9 - அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற பெயரில் பணம் பறிக்கும் மெடி அசிஸ்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யுனைடெட் இன் சூரன்ஸ் கம்பெனியை கண்டித்து திருப் பூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். கட்டணமில்லா சிகிச்சையினை உறு திபடுத்த வேண்டும், பணம் பறித்து கொள்ளையடிக்கும் மெடி அசிஸ்ட் நிறு வனம் மற்றும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யுனை டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் மெடி அசிஸ்ட் நிறுவனத் தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கைக் கண்டிப்பதுடன், உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படும் அரசு ஊழியர்கள் மன உளைச்ச லுக்கு ஆளாகின்றனர். எனவே மெடி அசிஸ்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியு றுத்தி திருப்பூர் குமரன் சாலையில் உள்ள யுனைடெட் இன்சூரன்ஸ் அலுவ லகத்தை முற்றுகையிட்டு வியாழ னன்று இந்த போராட்டம் நடத்தப்பட் டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப் பூர் மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் மா.பால சுப்பிரமணியம் உரையாற்றினார். சிஐ டியு மோட்டார் சங்க மாவட்டச் செயலா ளர் ஒய்.அன்பு கண்டன உரையாற்றி னார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெ.அந்தோணி ஜெயராஜ், டி.புஷ்ப வள்ளி, மாவட்ட இணைச்செயலா ளர்கள் எஸ்.ராணி, டி.வைரமுத்து உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.ராமன் நன்றி கூறினார்.