districts

img

பாத்திரத் தொழிலை இருளுக்குள் தள்ளும் மின் வாரியம்: பாத்திர தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.18-  கெப்பாசிட்டர் கருவி பொருத்து வதால் கடுமையாக மின் கட்டணம்  உயர்கிறது. மேலும், கெப்பாசிட்டர் பொருத்தாமல் உள்ள பாத்திர பட்ட றைகளுக்கு அபராதம் விதிக்கப்ப டுகிறது. இதை உடனடியாக கைவிட  வேண்டும் எனக் கோரி சிஐடியு பாத் திரத் தொழிலாளர் சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அனுப்பர்பாளையம் - ஆத்துப்பா ளையம் சாலையில் உள்ள மின்வா ரிய அலுவலகம் முன்பு சிஐடியு பாத் திரத் தொழிலாளர் சங்கத்தின் தலை வர் அ.ஆறுமுகம் தலைமையில் திங் களன்று நடைபெற்றது.  திருப்பூரில் வடக்கு பகுதியில் பித்தளை, அலுமினியம், எவர் சில்வர், காப்பர் பாத்திரங்கள் உற் பத்தி செய்யப்பட்டுகிறது. இத்தொ ழிலை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாநில  அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள் ளதால், பாத்திரத் தொழில் கடும்பா திப்பை சந்தித்துள்ளது. மேலும், பாலீஸ் பிரிவு பட்டறைகளில் மின்  மீட்டர்களுக்கு அருகில் கெப்பாசிட் டர் பொருத்த வேண்டும் என மின்  வாரியத்தினர் நிர்பந்தப்படுத்தி கரு வியை பொருத்தி வருகின்றனர். இந்த கருவியை பொருத்துவதால், இரண்டு மாதத்திற்கு ரூ.8000 மின் கட் டணம் செலுத்தி வந்த நிலையில், தற் போது ரூ.14,000 ஆக மின் கட்டணம்  உயர்ந்துள்ளது. எனவே உரிய முறை யில் முன்னறிவிப்பின்றி செயல்படுத் தும் நடவடிக்கையை மின் வாரியம்  நிறுத்த வேண்டும். கெப்பாசிட்டர் பொருத்தாமல் உள்ள பட்டறைக ளுக்கு அபராதம் விதிப்பதை ரத்து  செய்ய வேண்டும். விசைத்தறிக ளுக்கு வழங்குவதைப் போல பாத்தி ரத் தொழிலுக்கும் மானிய விலையில்  மின்சாரம் வழங்க வேண்டும். பாத்திர  தொழிலுக்கு என தனியாக குறைந்த  மின்கட்டண விகிதங்களை அமல்ப டுத்த வேண்டும். ஒன்றிய அரசு மின் சார துறையை கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரை வார்ப்பதை நிறுத்த  வேண்டும். தமிழக அரசு ஒன்றிய அர சின் மின் திட்டத்தை ஏற்கக்கூடாது.மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது.  மாத மாதம் மின் கட்டணம் கணக்கி டும் முறையை அமல்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பட்டன.  இதையடுத்து, மின் வாரிய அலுவலர் களை சந்தித்து இது தொடர்பாக  பேசப்பட்டது. இதில், பாத்திர சங்க செயலாளர் கே.குப்புசாமி, பொருளாளர் என். குபேந்திரன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்  கண்டன உரையாற்றினார். சிஐடியு  பாத்திரத் தொழிலாளர் சங்க நிர்வா கக் குழு உறுப்பினர்கள் கருணா மூர்த்தி, தவமணி, சண்முகம், மணி  உட்பட திரளான பாத்திர தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.