districts

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்: குவியும் புகார்களால் போலீசார் திணறல்

கோவை, ஆக.29- “வீட்டில் இருந்தபடியே சம் பாதிக்கலாம், வீடியோவிற்கு லைக் போடுங்க, கமாண்ட் பண்ணுங்க, சேர் பண்ணுங்க பணத்தை அள் ளுங்க” என விதவிதமான உள்ளக் கிளர்ச்சியூட்டும் ஆசை வார்த்தை களை சிதறவிட்டு, பட்டதாரி களை குறிவைத்து நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் அதிக ரித்து வருவது, அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. இதுகுறித்து அதிக மான புகார்கள் குவிந்து வருவ தால் குற்றப்பிரிவு போலீசார் திணறி  வருகின்றனர். கோவை மாநகரில் கடந்த ஏழு மாதத்தில் மட்டும் குற்றப்பிரிவு காவல்துறையில் 3013 புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்டவை பண மோசடி  புகார்களாகும். அதிலிலும், பகுதி  நேர வேலை என்றுக்கூறி முதலீடு  செய்ய வைத்து, லட்சக்கணக் கில் பணம் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. இதில் பணத்தை  லட்சக்கணக்கில் பறிகொடுத்த வர்களில் 80 சதவிகிதம் பேர் மென் பொறியாளர்கள் (ஐடி ஊழியர் கள்). அதிகமாக பணத்தை சேர்க்க  வேண்டும், அதை வேகமாக சேர்க்க  வேண்டும் என்கிற ஆர்வத்தில், இது போன்ற மோசடிகளில் சிக்கி மொத்த பணத்தையும் இழந்து வரு கின்றனர். ஆடம்பரமான வாழ்க்கை, கை நிறைய ஊழியம் என்று இருந்த பலரது வாழ்க்கை, இதுபோன்ற மோசடிகளால் அடை யாளம் தெரியாத அளவுக்கு மாறி யுள்ளது. இன்னும் பல பேர் இழப்பை தாங்கிக்கொள்ள முடி யாமல் தற்கொலை எண்ணத்திற்கு சென்றதாக காவல்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக கோவை, ரத்தின புரியைச் சேர்ந்த 27 வயது இளை ஞர், ஐடி நிறுவனத்தில் பணிபுரி கிறார். இவர் கடந்த வாரம் காவல்  நிலையத்தில் அளித்துள்ள புகா ரில், ஆன்லைன் மோசடியால்  ரூ.9.20 லட்சத்தை பறிகொடுத்த தாக தெரிவித்துள்ளார். மாத வரு மானம் 40 ஆயிரம் ரூபாய். திரு மணம் ஆகாதவர். வீட்டில் இருந்த படியே வேலை. இருந்தபோதிலும், தற்போது இவரது வாழ்க்கை வேறு ஒரு கோணத்தில் உள்ளது என இவ்வழக்கை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீசார் தெரி வித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில்  கொரோனா பரவலால், ஐடி நிறுவ னங்கள் வீட்டில் இருந்தபடி வேலை யை பார்த்து கொள்ளுமாறு வசதி களை தங்களது ஊழியர்களுக்கு கொடுத்துவிட்டனர். அலுவல கத்தில் வேலை பார்க்கும் போது,  அலுவலக கணினியில் மற்ற  வேலைகளை பார்க்க முடியாது.  ஆனால், வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்களது கணினியில் இதர  தேடல்களில் ஈடுபட ஆரம்பித்துள் ளனர். அப்போதுதான் அவர் களின் டெலிகிராம், வாட்ஸ் அப்  கணக்குக்கு, “பகுதி நேர வேலை  தருகிறோம். வீட்டில் இருந்தபடியே  மற்ற வேலைகளை பார்த்து கொண்டே தினமும் ஆயிரக்கணக் கில் வருமானம் ஈட்ட முடியும்” என  ஆன்லைனில் சொல்லி இவர் களை ஈர்த்து, பணத்தை பறித்து வருகின்றனர். அவர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் தற்போது காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இப்படி பலரும் பணத்தை இழக்க  போலீஸில் தினமும் 20க்கும் குறை வில்லாமல் புகார்கள் குவிந்து வர,  என்ன செய்வது என்றே தெரியாமல் பணத்தை இழந்தவர்களும், காவல் துறையினரும் தடுமாறி வருகின்றனர். இதுவரை 3013 புகார்களில் 77 புகார்கள் மீது  மட்டும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. உரிமை மீறல் தொடர் பான 812 புகார்கள் முடித்து வைக்கப்பட்டள்ள நிலையில், மீத முள்ள பண மோசடி புகார்கள் மீது  என்ன செய்வது என்றே முடியாமல்  போலீசார் தவித்து வருகின்றனர்.