நாமக்கல், பிப். 6- பல ஆண்டுகளாக உயர்த்தப்படா மல் உள்ள விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு கூலி உயர்வை வழங்க வேண் டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதா வது, குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க படவில்லை. இத்தொழிலில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் 12-மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். தற் போது விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், குமாரபாளை யத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங் களும், இணைந்து பலமுறை தொழிலா ளர் துறை முன்பாக கூலி உயர்வு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தும் பலன் ஏற்படவில்லை.
எனவே, கடந்த 23.1.2023 முதல் 75 சத கூலி உயர்வு வழங்கக்கோரி தொழிலா ளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், பிப்ரவரி 4 ஆம் தேதி, குமாரபா ளையம் வட்டாட்சியர் தலைமை நடை பெற்ற பேச்சுவார்த்தையில், விசைத் தறி உரிமையாளர்கள், அடப்புத்தறி உரி மையாளர்கள், மற்றும் ஐந்து தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விசைத்தறி உரிமையாளர் தரப்பில், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி கொடுத் தால் மட்டுமே தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க முடியுமென தெரி வித்துள்ளனர். எனவே, தற்போது நடை பெற்று வரும் வேலைநிறுத்த போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகை யில், நேரடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, ஜவுளி உற்பத்தியாளர் கள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், வருவாய், தொழிலாளர் துறை அலுவலர்கள், முன் னிலையில் பேசி தீர்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு நாமக்கல் மாவட்ட தலைவர் எம். அசோகன், மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு இயக்கத்தின் சார்பில் சிஐடியு கே.பாலுசாமி, ஏஐடியுசி பால சுப்பிரமணி, ஏஐசிசிடியு சுப்பிரமணி, எச்எம்எஸ் தேவராஜ், எல்பிஎஸ் அருள் ஆறுமுகம், எல்டியுசி கோவிந்தராஜ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று மனு அளித்தனர்.