districts

img

திருப்பூரில் உள்ள 340 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.11- திருப்பூரில் பணியாற்றும் 340 பகுதி  நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு திங்களன்று பகுதி நேர ஆசிரி யர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்த னர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 340 பகுதி நேர ஆசிரியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.12,500 மட்டுமே ஊதியமாக வழங்கப் படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி  இந்த குறைந்த ஊதி யத்தில் பணியாற்றுகிறோம். இப்படி பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந் தரம் செய்யக் கோரி கடந்த 13 ஆண்டுக ளாக கோரிக்கை வைத்து வருகிறோம். 2016 மற்றும் 2021ஆம் ஆண்டு தேர்தல்  அறிக்கையில் திமுக அரசு அமைந்தால்  ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வ தாக வாக்குறுதி அளித்தது. திமுக அரசு  ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும்  இன்னும் பணி நிரந்தரம் செய்ய வில்லை. உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மாநிலம் முழு வதும் உள்ள 12000 பகுதி நேர ஆசிரியர் களும் சென்னையில் கோட்டையை முற் றுகை இடுவோம் என தெரிவித்தனர்.  முன்னதாக பகுதிநேர ஆசிரியர் சங் கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார் பில் பழ.கௌதமன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலச்  செயலாளர் யசோதா, மாவட்டத்த லைவர் ஆனந்தன், மாவட்டச் செயலா ளர் ஜோதிமணி உள்ளிட்ட திரளான ஆசி ரியர்கள் கலந்து கொண்டனர். இதைய டுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.