districts

img

ஈரோட்டில் 100 டிகிரி வெயில்: பொதுமக்கள் அவதி

ஈரோடு, பிப். 25 - தமிழ்நாட்டில் கோடை வெயில்  ஆரம்பம் ஆகும் முன்பே முதல்முறை யாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில  நாட்களாகவே 95 டிகிரி வரை வெயிலின்  தாக்கம் இருந்து வந்தது. எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயி லின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் பிப்ரவரி மாதத்திலேயே வெயி லின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இயல்பை விட 3 டிகிரி கூடுதலாக வெப் பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுத் திருந்தது. இந்நிலையில் செவ்வா யன்று ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி  பாரன்ஹீட் வெயில் பதிவானது. இது தமிழகத்தில் முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  வெயிலின் தாக்கம் காரணமாக எப் போதும் பரபரப்பாக காணப்படும் பன் னீர்செல்வம் பார்க், காளை மாட்டு  சிலை, ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா,  மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு  போன்ற பகுதிகளில் மதிய நேரம் ஆட் கள் நடமாட்டம் குறைந்து காணப் பட்டது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் மோர், இளநீர் மற்றும்  குளிர்பானங்களை அருந்தி வரு கின்றனர். வேலைக்கு செல்லும் இளம் பெண்கள், மாணவிகள் குடைகளைப் பிடித்த படி செல்கின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிய தால் ஈரோடு மக்கள் அவதியடைந்து  வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட் களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என அச்சத்தில் உள்ளனர்.