இளம்பிள்ளை, ஜூன் 7- இடங்கணசாலை நகராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக் கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் மாரியம்மன் கோவில் அருகே உள் ளது ஆசாரி தெரு. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அமைக்கப்பட்ட சாலை மிகவும் சேதமடைந்ததால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அத னைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட் டது. அப்போது, ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு, சாலைப்பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப் பகுதி பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 30 அடி அகலம் கொண்ட வீதி உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது. பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட் டில் துவங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத் தப்பட்டுள்ளது. இப்பகுதியில் முறை யான சாக்கடை வசதியும் செய்து கொடுக் கப்படவில்லை. தற்பொழுது சாலை அமைக்கும் பணியால் மழைநீர் செல் வதற்கு முறையான கால்வாய் இல்லா ததால், மழை காலங்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் முறையாக அளவீடு செய்து மழைநீர் வீடுகளில் செல்லாத வாறு கால்வாய் அமைக்கவும், சாக் கடை வசதி ஏற்படுத்தி, கிடப்பில் போடப் பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.