நாமக்கல், நவ.28- பென்சனர்கள் சங்க சேலம் மண்டலக் கருத்தரங்கம், புதனன்று நாமக்கல்லில் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், படைவீடு பேரூ ராட்சி, சங்ககிரி மேற்கு பகுதியில் அமைந் துள்ள சிஐடியு அலுவலகத்தில், 1995 இபிஎஸ் பென்சனர்கள் சங்க சேலம் மண்டலக் கருத்த ரங்கம் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு, சங்கத்தின் மண்டலத் தலைவர் எ. மாணிக்கம் தலைமை வகித்தார். துணைத் ்தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். செய லாளர் பஞ்சாலை சண்முகம், பொருளாளர் என்.பன்னீர்செல்வம், சேலம் செல்வராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார், இபிஎப் மாநில துணைச்செய லாளர் உமாகாந்தன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இக்கருத்தரங்கில், கூட்டுறவு, தனி யார் பள்ளிகள், பஞ்சாலைகள், சைசிங் உள் ளிட்ட டெக்ஸ்டைல் நிறுவனங்கள், சிமெண்ட் ஆலை, இரும்பாலை சர்க்கரை, பேப்பர் போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர் ்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உயர் பென்சன் வழங்க வேண்டும். மூத்தகுடி மக்க ளுக்கான ரயில்வே கட்டண சலுகையை மீண் டும் வழங்க வேண்டும். பென்சனர்கள் அனை வருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, டிச.19 ஆம் தேதியன்று சென்னை யில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஏராளமான வாகனங்களில் பென் சனர்களை திரட்டி செல்வது, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தில்லி நாடாளுமன்றம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் அதிக ளவு பென்சனர்களை அழைத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.