நீலகிரி மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடி மையமான பந்தலூர் வட்டம், கன்னம்வயல் வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா பார்வையிட்டார். அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், உதவி தேர்தல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் உள்ளனர்.