districts

img

சிபிஎம் சேலம் மேற்கு மாநகரச் செயலாளராக பி.கணேசன் தேர்வு

சேலம், அக்.14- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம்  மேற்கு மாநகரச்செயலாளராக பி.கணேசன் தேர்வு செய்யப்பட் டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சேலம் மேற்கு மாநகர 8  ஆவது மாநாடு, ஜவகர் மில்  பகுதியில் ஞாயிறன்று நடை பெற்றது. கட்சியின் செங்கொடியை ஜோதி பாசு ஏற்றி வைத்தார். எம்.கார்த்திக் வர வேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ரமணி மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மேற்கு மாநகரச் செயலாளர் எம். கனகராஜ் அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட்டில், சேலம் மாநகராட்சிக்குட் பட்ட 60 வார்டுகளிலும் அடிப்படை பிரச்சனை களை தீர்க்க வேண்டும். குறிப்பாக, ஸ்மார்ட்  சிட்டி பெயரில் தெருக்கள் அனைத்தும் தோண்டப்பட்டு, பாதாள சாக் கடை திட்டம் என்ற பெயரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. அதனை உடனடியாக  சீர்படுத்த வேண்டும். வெள்ளிச் சந்தையை உருவாக்கி பல  ஆயிரக்கணக்கான வெள்ளித் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும். மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை  தனியாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் சேலம்  மேற்கு மாநகரச் செயலாளராக பி.கணே சன் மற்றும் 13 மாநகரக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதய குமார் நிறைவுரையாற்றினார்.