districts

img

உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை

சத்தியமங்கலம், அக்.19- உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு  அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட் டம், கொத்தமங்கலம் கிராமப் பகுதியில் வசித்து வந்த கரியப்பன் மகன் கோவிந்த ராஜ். இவர் கடந்த வாரம் மைசூர் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து வெள்ளியன்று கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் கூராய்வு முடிந்து வெள்ளி யன்று இரவு கொத்தமங்கலத்தில் உள்ள  வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனி டையை கோவிந்தராஜ் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட நிலையில், அவரின் உடலுக்கு சத்தியமங்க லம் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல் உள் ளிட்ட அரசு அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தனர்.