districts

img

அமித்ஷா கோவை வருகைக்கு எதிர்ப்பு

கோவை, பிப். 25- கோவை மாவட்டத்திற்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் பல்வேறு இடங்க ளில் கருப்பு கொடி காட்டி, முற் போக்கு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது.  கோவையில் உள்ள ஈஷா யோகா  மையத்தில் நடைபெற உள்ள சிவ ராத்திரியில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாயன்று விமான  மூலம் கோவை வந்தார். கல்வி  மற்றும் பேரிடர் நிதியை வழங்காத  ஒன்றிய அரசை கண்டித்து தமிழகமே  கொந்தளித்துக் கொண்டிருக்கும்  நிலையில், கோவை வந்த ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு இடங்களில்  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றது. அதன் ஒரு பகுதியாக கோவை  மாவட்டம், பீளமேடு பகுதியில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம், பெரி யாரிய இயக்கங்கள், அம்பேத்கா ரிய இக்கங்கள் ஆகிய முற்போக்கு அமைப்பினர் அமித்ஷாவை கண் டித்து கருப்பு கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ கம் வரும் அமித்ஷாவே திரும்பிப் போ  என கோஷங்களை எழுப்பினர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை  பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலை வர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 200  பேரை போலீசார் கைது செய்தனர். காந்தி பார்க் பகுதியில் காங்கி ரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின்  மாநிலத் தலைவர் செல்வப்பெருந் தகை கலந்து கொண்டார்.  அப்போது  நாடாளுமன்றத்தில் அம்பேத்கார், முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா  காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதோடு, மாநில அரசுக்கு தர வேண்டிய கல்வி மற்றும் பேரிடர் நிதியை தர மறுக்கும் பாஜக அரசை  கண்டித்து கோசங்களை எழுப்பினர். அப்போது “கோ பேக் அமித்ஷா” என  கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.