districts

img

புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு

விசிக சார்பில் கருத்தரங்கம்

தருமபுரி, செப்.18- புதிய கல்வி கொள்கை - 2019 வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  சார்பில் அரூரில் புதனன்று கருத்தரங்கம் நடை பெற்றது.  இக்கருத்தரங்கிற்கு ஒன்றிய செயலாளர் மூவேந்தன் தலைமை தாங்கினார். முதன்மை செய லாளர் ஏ.சி.பாவரசு, தலைமை நிலைய செயலாளர் தமிழ்செல்வன், கி.கோவேந்தன், மாவட்ட செய லாளர்கள் ஜானகிராமன், த.ஜெயந்தி, தொகுதி செய லாளர் சாக்கன்சர்மா, மாவட்ட மகளிர் அணி தலைவர் பத்மா மாரியப்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் க.சி.தமிழ்குமரன்,  புத்தமணி ஆகியோர் பேசினர். புதிய கல்விக் கொள்கையால் இன்றைய கல்வி முறை மாற்றியமைக்கப்படும். வெளிநாட்டு பல் கலைக்கழகங்கள், பன்னாட்டு நிதி மூலதனத் தேவைக்கேற்ப பாடத்திட்டம் உருவாக்கப்படும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரு காமைப் பள்ளிகள் மூடப்படும். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு  என்ற கல்விமுறை மாற்றியமைக்கப்படும். அனைத்து பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பட்டப்படிப்பு நான்கு வருடங்களாக மாற்றப்படும். தொடக்க கல்விகளிலேயே தொழில் கல்வி முறையை புகுத்தி குலக்கல்வி முறையை திணிக்கப்படும். நர்சரி முதல் 12ஆம் வகுப்பு வரை  மும்மொழித்திட்டம் அமலாக்கப்படும். இது இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும். இட ஒதுக்கீடு வாய்ப்பு பறிக்கப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் இடம்  அளிக்கும் முறை, ஆசிரியர்களின் பணி, ஊதிய உயர்வு அனைத்தும் பணி மூப்பு அடிப்படையில் அல்லாமல் தகுதித் தேர்வு அடிப்படையில் நிர்ணயிக் கப்படும். எனவே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெறவேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.  

;