districts

img

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதற்கு எதிர்ப்பு

விருதுநகர், ஏப்.29-அரசுப் பள்ளிகளை தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு தத்து கொடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் இச்செயலைக் கண்டித்து நான்கு முனைகளிலிருந்து வருகின்ற மே 25-30 ஆம் தேதி வரை சைக்கிள் பிரச்சாரம் நடத்துவது என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் விருதுநகரில் ஏப்ரல்27,28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் கூறியதாவது : 

ரூ.1400 கோடி எங்கே?

கடந்த 5 ஆண்டு காலமாக மத்திய அரசு கல்வித்துறை மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1400 கோடியை வழங்கவில்லை. தமிழகத்தில் உள்ள மாணவர்களின் மருத்துவக் கனவைதகர்க்கும் வகையில் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. தற்போதுதமிழகத்தில் உள்ள பல்கலைக்கழ கங்கள் ஊழல் மையமாகவும், பாலியல் சீண்டல் செய்திடும் இடமாகவும் மாறியுள்ளது. தனியார் பள்ளிகள் பெற்றோர் களிடம் கோடி, கோடியாய் கல்வி கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கின்றன. இதை தடுக்க மாசிலாமணி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால் இதுவரை எந்த தனி யார் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு கட்டண மின்றி கல்வி வழங்க வேண்டும். அர சாங்கம், அதற்கான கட்டணத்தை தரமறுப்பதால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு பெற்றோருடன் சென்றனர். அதில் சிலபெற்றோர் உயிரிழந்தனர். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த ஆண்டும் அதில்குளறுபடிகள் நீடிக்கிறது. மாண வர்களின் ஊருக்கு அருகிலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்க போதிய வசதிகள் தமிழகத்தில் உள்ளன. பின்பு ஏன் வெளி மாநிலத்தில் தேர்வு எழுத வேண்டும்? இது மாணவர்களை அலைக்கழிக்கும் செயலாகும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 

டாஸ்மாக் நடத்தும் அரசால் பள்ளி நடத்த முடியாதா? 

தமிழக அரசு, கல்வித்துறையில் அக்கறையற்றப் போக்குடன் செயல் பட்டு வருகிறது. தற்போது அரசுப் பள்ளிகளை சீரழிக்கும் வகையில் அதை தனியார் மற்றும் தொண்டு நிறுவனங் களுக்கு தத்து கொடுக்க முடிவு செய்துள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் கோடி செலவு செய்வதாக கூறப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளை ஏன் நடத்த முடியவில்லை? மாறாக டாஸ் மாக்கை மட்டும் அரசு நடத்தி வருகிறது. எனவே, தனியாருக்கு அரசுப் பள்ளிகளை தத்து கொடுக்கும் தமிழக அரசின்செயலை கண்டித்தும், அரசே பள்ளி களை ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், தனியார் கல்விக் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிதம்பரம் ஆகிய 4 முனைகளிலிருந்து சைக்கிள் பிரச்சாரம் வருகின்ற மே 25 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.ஒவ்வொரு குழுவிலும் 100 மாண வர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின் போது, மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலதுணைச் செயலாளர்கள், ஆர்.பிரகாஷ், ம.கண்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சத்யா, நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் மாடசாமி,மாவட்டச் செயலாளர் பிரசாந்த் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.



;