districts

img

அரசு மருத்துவமனைகளில் போதை மீட்பு மையம் திறப்பு

கோவை, பிப்.27- அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைகளில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு  மையத்தை காணொலி காட்சி வாயி லாக தமிழக முதல்வர் திறந்து வைத்த நிலையில், கோவையில் ஆட்சியர் பவன் குமார் வியாழ னன்று நேரில் திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 25 ஒருங் கிணைந்த போதை மீட்பு சிகிச்சை  மற்றும் மறுவாழ்வு மையங்களை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்ஒருபகுதியாக, கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் (CMCH)  வியாழனன்று சிறப்பு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்  திறக்கப்பட்டது. இந்த மையத்தை  கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் திறந்து வைத்தார். மருத்துவமனை முதல் வர் நிர்மலா, கோவை மாநகராட்சி மேயர் ஆர்.ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.  முன்னதாக, இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், போதை பழக்கத்திற்கு அடிமை யானவர்களுக்கு எளிதில் அணுகக் கூடிய மற்றும் பயனுள்ள சிகிச்சையை வழங்குவதற்கான முயற்சியாக அரசு மருத்துவமனை யில் போதை மீட்பு மற்றும் மறு வாழ்வு மையம் அமைக்கப்பட்டுள் ளது. போதை மீட்பு மற்றும் ஆரோக் கியமான வாழ்க்கையை நோக்கி  சிகிச்சைக்காக வரும் நோயாளிக ளுக்கு தேவையான அனைத்து  வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள் ளது. போதை ஒழிப்பை பொறுத் தவரை மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை களை முன்னெடுத்து வருகிறது என  தெரிவித்தார். சேலம் இதேபோன்று, சேலம் அரசு  மோகன் குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநக ராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் ஆகி யோர், போதை மீட்பு சிகிச்சை மற் றும் மறுவாழ்வு மையத்தினை பார் வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் பேசுகையில், சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 10  படுக்கைகள் கொண்ட போதை  சிகிச்சைப்பிரிவு செயல்பட்டு வருகி றது. இதில், போதைப்பழக்கத் திற்கு ஆட்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, மீண்டும் போதைப்பழக்கத்திற்கு ஆட்பட்டு விடாமல், தங்கள் குடும் பத்திற்குத் தேவையான வரு வாயை ஈட்டுவதற்குத் தேவையான  முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தகுதியானவர்களாக மாற்றும் விதத்தில் இம்மையம் செயல் படவுள்ளது. இம்மையத்தில் சிகிச்சையுடன் உள்ளரங்க விளை யாட்டு வசதிகளும், யோகா போன்ற மாற்று பயிற்சி முறைக ளும் பயன்படுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறு வர், சிறுமியர் யாரேனும் போதைப் பழக்கத்திற்கு ஆட்டுபட்டு இருந் தால், அவர்கள் தங்கி சிகிச்சை பெற வும் இம்மையத்தில் வசதிகள் உள் ளன, என்றார். இந்நிகழ்ச்சியில், அரசு மோகன்  குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.தேவி மீனாள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச. சௌண்டம்மாள், மருத்துவ மனைக் கண்காணிப்பாளர் ரா. ராஜ்குமார், மன நலத்துறைத் தலை வர் கே.எஸ்.ரவிசங்கர், மாநகராட்சி  துணை மேயர் மா.சாரதாதேவி உட் பட பலர் கலந்து கொண்டனர்.