கோவை, ஆக.8- வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா பொது மக்கள் பயன்பாட்டிற்காக வியாழனன்று திறக்கப்பட்டது. இப் பூங்காவை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவ சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் குளத்தின் நீர் வழிப் பாதையை தூர்வாரி, குளத்திற்கு நீர் கொண்டு வந்த பின் வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டன. இதையடுத்து இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்க குழுவினரின் உதவியுடன் தொடர்ந்து ஒரு வருடம் குளக்கரை யில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில், 103 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வெள்ளலூர் குளக்கரையில் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டன. இதன் அடுத்த கட்டமாக வெள்ளலூர் குளக்கரை யில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங் களை பாதுகாக்கவும், மாணவர்கள் பொது பொதுமக்க ளுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்லவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்தது. நீர்வளத்துறை அனு மதியோடும், தனியார் நிறுவனங்களின் நிதியுதவியோடும் ரூ.66 லட்சம் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பட்டாம்பூச்சி பூங்கா வியாழனன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பூங்கா சிறப்பம்சங்கள் 18 அடி தமிழ்நாடு பட்டாம்பூச்சி நுழைவாயில், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், பல்லுயிர்கள் பாதுகாக்க முன் னோர்களின் நடவடிக்கை குறித்த புடைப்பு ஓவியங்கள், மூங் கில் பாலம், பட்டாம்பூச்சி வாழ்க்கை சுழற்சி, கோவை, மேற்குத் தொடர்ச்சி மலை, நொய்யல் ஆறு, குளங்கள், பட்டாம்பூச்சி கள் உள்ளடக்கிய தகவல் மையம், பட்டாம்பூச்சி செல்பி முனை, பறவைகள், விலங்குகள், ஊர்வன கல் சிற்பங்கள், பட்டாம்பூச்சி குடும்பங்கள் தகவல் பலகை உள்ளிட்டவை பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள் ளது. வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்காவை அனைவரும் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.