ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஓலா, உபர், பைக் டாக்ஸி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், குன்னூர் நகராட்சி ஆட்டோ ஸ்டாண்ட்டை கைப்பற்றாதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி குன்னூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு ஆட்டோ சங்கத் தலைவர்கள் குமரேசன், சிவராமன், யோகேஷ், சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன், மாவட்டச் செயலாளர் சி.வினோத் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.