districts

img

மயானம் இல்லை: சடலத்துடன் மறியல்

ஈரோடு, நவ.17- முறையாக மயானம் ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்து, பவானி அருகே பொதுமக்கள், சடலத்து டன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்திற்குட்பட்ட ஒரிச் சேரிபுதூர், காமராஜ் நகரில், பட்டியலின மக்கள் நூறாண்டு காலமாக வசித்து வருகின்றனர். இம்மக்க ளுக்கு தமிழக அரசு சார்பில், முறையாக மயானம் ஒதுக்கீடு செய்து தரவில்லை. இந்நிலையில், சனியன்று கருப்பாயி என்பவர் வயது மூப்பு காரணமாக மரண மடைந்தார். அவரின் உடலை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய மயானம் இல்லாததால், சாலையில் வைத்து மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையி னர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்களன்று (இன்று) நிலத்தை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதி யளிக்கப்பட்டது. இதனையேற்ற அப்பகுதியினர் போராட் டத்தை கைவிட்டு பிரேதத்தை அடக்கம் செய்ய எடுத்துச்  சென்றனர். இப்போராட்டத்தில், ஒரிச்சேரி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆர்.கோபால், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரிச்சேரிபுதூர் கிளை உறுப்பினர்கள் சித்தன், குருசாமி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.