districts

img

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக்கொண்டாட்டம்

ஈரோடு, பிப். 27- கூரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவி யல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 15  அரசுப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இதன் துவக்க விழா வியாழனன்று கூரப் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்தி ரன் தலைமை வாகித்தார். பள்ளி  தலைமை ஆசிரியர் மீனா வரவேற் புரையாற்றினார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநிலச் செயலா ளர்வி.ராமமூர்த்தி, மாவட்டச் செயலா ளர் இர.முரளி கார்க்கி, மாநகரச் செயலாளர் பொ. மேனகா, வேளா ளர் மகளிர் கல் லூரி பொறுப்பா ளர் இரா.பார்வதி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சர்‌‌. சி.வி.இராமன் முகமூடி வழங்கப்பட்டு தேசிய அறிவியல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய விஞ்ஞானி சர்.சி.வி இராமன் தன்னுடைய ஒளிச்  சிதறல் ஆய்வை சமர்ப்பித்த நாளான  1928 பிப்ரவரி 28 ஐ 1986 முதல் தேசிய  அறிவியல் தினமாக கொண்டாடப்படு கிறது.