சேலம், ஜன.20- 25 ஆண்டுகளாக “உதயம்” என்ற பெயரில் மாத இதழ் நடத்தும் எல்ஐசி பெண்கள் அமைப்பினர், இதழின் வெள்ளி விழாவை கொண்டாடினர். தென்மண்டல எல்ஐசி உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவில் சார் பில், “உதயம்” என்ற மாத இதழ் கடந்த 25 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரு கிறது. இந்நிலையில், இதழின் வெள்ளி விழா சேலம் மாவட்டம், அழகாபுரம் பகுதியில் உழைக்கும் மகளிர் ஒருங் கிணைப்புக்குழுவின் இணை அமைப் பாளர் ஆர்.எஸ்.செண்பகம் தலைமை யில் நடைபெற்றது. வெள்ளி விழா இதழை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலா ளர் எம்.கிரிஜா வெளியிட்டார். இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் அகில இந்திய துணைத்தலை வர் பி.சுகந்தி பெற்றுக் கொண்டு சிறப் புரையாற்றினார். முன்னதாக, பெண்களுக்கு பணி யிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே உறுதி செய்ய வேண் டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறை எல்ஐசியை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வினிடையே, சரோஜ் கலைக்குழுவின் பாடல்களும், சேலம் அக்னி கலைக்குழுவின் ஞானக்கிருக் கன் நாடகமும் நடைபெற்றது. இதில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஆர். தர்மலிங்கம் சர்வ மங்களா, காப்பீட்டு கழக ஊழியர் சங்கச் செயலாளர் நரசிம் மன், செயற்குழு உறுப்பினர் எம்.கே. கலைச்செல்வி உட்பட சென்னை, வேலூர், கோவை, தஞ்சை, மதுரை, திரு நெல்வேலி, சேலம் ஆகிய 8 கோட்டங் களில் இருந்து திரளானோர் பங்கேற்ற னர்.